அன்புநிறை நண்பர்களுக்கு..

Ko. Sugumaran Jaipur  / கோ.சுகுமாரன் ஜெய்பூர்மக்கள் பிரச்சனைகளைக் கையாளுவதிலும், போராட்டங்களுமாக கழிகிறது என் வாழ்க்கை. இருபது ஆண்டு கால இயக்க அனுபவம் இருந்தாலும் நிறைவு பெறவில்லை மனம்.

எழுதுவதற்கு நிறைய இருந்தும் இடம் கொடுக்கவில்லை காலம்.

வெற்றுக் குடமெல்லாம் எழுப்புகின்றன இரைச்சல் நிறைந்த சத்தங்களை.

தமிழ்ச் சமூகத்தில் ஒழுக்கம், அறம் சார்ந்த பண்புகள் பறக்கின்றன காற்றில்.

மக்கள் வரலாறு பதியப்படாமல் மறக்கடிக்கப்படுகின்றன. குரலிழந்தும் வாழ்விழந்தும் கிடக்கிறது மக்கள் வாழ்க்கை.

சாதி, மதம் என்ற வெடிப்புகளின் சந்துக்களிடையே நசுங்குகின்றன மக்கள் உயிர்கள்.

மக்கள் வாழ்க்கையைப் பதியும் நோக்கோடு என் படைப்புகளை படிக்கலாம் இத்தளத்தில்.

தோழமையுடன்,

கோ. சுகுமாரன்.