மரணத்தின் உயிர்ப்புக்கு மரணமில்லை

மரணித்த உடலின்முன் நின்று வருந்தியதும், கதறியதும் சகஜம். கிடத்தி வைக்கப்பட்ட உடலின்முன் நிற்கும் சில நொடிக் கணத்தில் பழகிய வாழ்வு முழுதும் நினைவுக் கொள்ளும். காலம் மரணத்தை வெல்லாதோ என்ற எண்ணம் தோன்றி மறையும். சொற்ப வெறுப்பும், விமர்சனமும் மரணத்துடன் மரணமாகிவிடும். மரணத்தின் உயிர்ப்புக்கு மரணமில்லை.