மனிதர்கள் பற்றி…

நான் சின்ன வயதாக இருந்த காலத்தில் இருந்து இப்போது வரை சந்தித்த மனிதர்களைப் பற்றி எழுத விரும்புகிறேன்.

மனிதர்கள் என்று சொல்வதனால் அதில் சற்று சுவாரசியம் உண்டு. பொதுவாக மனிதர்கள் என்று சொல்வதினால் யாரைப் பற்றி எழுதப் போகிறேன் என்ற ஆவல் வருவது இயற்கைதான்.

நான் எழுதப் போகிற மனிதர்கள் நம்மிடையே இப்படிப்பட்டவர்களும் வாழ்ந்தார்களா? வாழ்கிறார்களா? என்ற கேள்வியை உங்கள் ஆழ்மனத்தில் எழுப்பும்.

நான் சிலரிடம் பழகியதற்காக என் வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட வேண்டுமென எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன். பலரோடு பழகியதற்காக உள்ளார்ந்த மகிழ்ச்சியை இன்றும்  துய்த்துக்  கொண்டிருக்கின்றேன். அவற்றை நினைத்து நினைத்துப் பார்த்துச் சுகமடைகிறேன்.

என்னைச் சூழ்ந்து நிற்கும் வெளி துயரமானது. அது அகம், புறம் இரண்டிலும் கவ்விப் பிழிவது தனிக்கதை.

இச்சூழலை எல்லாம் தாண்டி நான் உள்வாங்கிய மனிதர்கள் குறித்து உங்கள் பார்வையை ஈர்க்க விரும்புகிறேன்.

அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்ளாமல் உடனுக்குடன் பதிவிட எண்ணியுள்ளேன்.

மீண்டும் சந்திப்போம்.